பசு பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டம் இயற்ற குழு அமைப்பு!

ஜூலை 24, 2018 498

புதுடெல்லி (24 ஜூலை 2018): பசு பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் இரண்டு குழுக்கள் ஒன்றிய அரசால் அமைக்கப் பட்டுள்ளது.

பசு பாதுகாவல் என்ற பெயரில் பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விரிவாக ஆய்வுசெய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக இரண்டு உயர்மட்டக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா தலைமையிலான உயர்மட்டக் குழுவில், நீதித்துறை, சட்ட விவகாரங்கள், நாடாளுன்றம், சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதேபோல, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தவர் சந்த் கெலாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கும்பல் தாக்குதல் விவகாரங்கள் குறித்து உள்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அதனைத் தடுக்கும் வகையிலான சட்டம் இயற்றுவது குறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்கும். இதனை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தங்களது பரிந்துரைகளை அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கும்பல் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், சட்டம் இயற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...