காதல் விவகரம் - முஸ்லிம் வாலிபர் மீது கொடூர தாக்குதல்!

ஜூலை 24, 2018 631

கைஜாபாத் (24 ஜூலை 2018): உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் வாலிபர் மீது தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கைஜாபாத்தைச் சேர்ந்தவர் சாகில்(25), நொய்டாவில் பணிபுரிந்து வருகின்றார். இவர் ப்ரீத்தி சிங் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து நொய்டா நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துக்கொள்ள சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வன்முறை கும்பல் சாகிலை கடுமையாக தாக்கியுள்ளது. கலவரத்தை தூண்டும் விதமாக அந்த கும்பல் கூச்சல் இட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலமையை கட்டுப் படுத்தி இருவரையும் அந்த கும்பலிடமிருந்து மீட்டு அருகில் இருக்கும் சிஹானி கேட் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...