எங்கள் குழந்தைகள் பசியிலேயே இறந்து விடுவார்கள் - அக்பர்கானின் தந்தை கண்ணீர் பேட்டி!

ஜூலை 25, 2018 706

ஆல்வார் (25 ஜூலை 2018): எங்கள் குழந்தைகள் பசியிலேயே இறந்து விடுவார்கள் என்று ராஜாஸ்தானில் மாட்டுக்காக பசு பயங்கரவாதிகளால் கொல்லப் பட்ட அக்பர்கானின் தந்தை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வரில் மாடுகளைக் கடத்தியதாக பால் வியாபாரி அக்பர்கான் பசு பயங்கரவாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அக்பர்கானுக்கு உடனடி சிகிச்சை அளிக்காமல் இழுத்தடித்ததாக போலீசார் மீதும் குற்றசாட்டு உள்ளது.

இந்நிலையில் அக்பர்கானின் தந்தை சுலைமான் கான் இதுகுறித்து கூறுகையில்," எங்கள் பிழைப்பே பால் வியாபாரம்தான். என் மகன் மாடு வாங்க சென்றபோது வரும் ஹஜ்ஜுப் பெருநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்று தெரிவித்திருந்தான். அதற்காக பணமும் சேர்த்தான். அக்பர்கானின் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நினைத்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. மாட்டுக்காக ஒரு உயிரை கொன்றார்கள். இனி எங்கள் குழந்தைகள் பசியிலேயே இறந்து விடுவார்கள்." என்றார் கண்ணீருடன்.

அக்பர்கானுக்கு மனைவி மற்றும் 14 வயதில் மூத்த குழந்தையும், 2 வயதில் இளைய மகனும் என 7 குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...