பெண்ணுடன் டேட்டிங் செய்ய சென்ற இந்திய மாணவர் அடித்துக் கொலை!

ஜூலை 25, 2018 589

மெல்போர்ன் (25 ஜூலை 2018): ஆஸ்திரேலியாவில் இளம் பெண்ணுடன் டேட்டிங் செய்ய சென்ற இந்திய இளைஞர் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பயின்று வந்த இந்திய மாணவர் மவுலின் ரத்தோட் (25). இவருக்கு டேட்டிங் இணைய தளம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அடுத்து திங்கள் அன்று இரவு அந்த பெண்ணை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால் அவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...