விமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல்!

ஜூலை 26, 2018 672

புதுடெல்லி (26 ஜுலை 2018): டெல்லி வந்த ஏர் ஆசியா விமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்தி வழியாக டில்லிக்கு ஏர் ஆசியா விமானம் புதன் கிழமை வந்தது.பயணியர் அனைவரும் இறங்கிய நிலையில் விமான கழிப்பறையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையின் வாயில் கழிப்பறை பேப்பர் திணிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து, டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...