கார்கில் போர் 20 ஆவது நினைவு தினம் இன்று!

ஜூலை 26, 2018 854

ஸ்ரீநகர் (26 ஜூலை 2018): கார்கில் போர் 20 ஆவது நினைவு தினத்தை ஒட்டி ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அதிரடியாக விரட்டியடித்தது. இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் போரில் இந்திய வீரர்கள் 527 பேர் வீரமரணம் அடைந்தனர். 1500-க்கம் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 ஆம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

சென்னை மெரினாவில் போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் த்ராஸ் போர் நினைவுச் சின்னத்திலும் ராணுவ வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...