மாட்டுக்கறிக்காக அலீமுத்தீனை கொலை செய்தவர் மின்சாரம் தாக்கி மரணம்!

ஜூலை 28, 2018 844

ராம்கார் (28 ஜூலை 2018): ஜார்கண்டில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாக அலீமுத்தீன் என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான சிக்கந்தர் ராம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஜார்கண்டில் 55 வயது அலீமுத்தீன் என்ற வியாபாரி கடந்த வருடம் ஜூன் 29 ஆம் தேதி மாட்டுக் கறி கொண்டு சென்றதாக ஒரு கும்பல் சாலையில் வைத்து கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயம் அடைந்த அலீமுத்தீன் என்கிற அஸ்கர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப் பட்டு kசிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இவர்களில் 8 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் சிக்கந்தர் ராம். இவர் வெள்ளிக்கிழமை சாலையில் சென்றபோது மழையால் நீர் தேங்கியிருந்த பகுதியில் நடந்துள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்சார வயர் மூலம் காலில் மின்சாரம் பாய்ந்து சிக்கந்தர் ராம் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைபற்றி போஸ்ட் மாட்டம் செய்வதற்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...