உத்திர பிரதேச மழைக்கு இதுவரை 58 பேர் பலி!

ஜூலை 28, 2018 490

லக்னோ (28 ஜூலை 2018): உத்திரபிரதேச மாநிலத்தில் பெய்த மழையால் இதுவரை 58 பேர் பலியாகியுள்ளனர்.

வட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதில் உத்திர பிரதேச மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. அதிகப்படியாக சாஹாரன்பூர் பகுதியில் 11 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆக்ரா மற்றும் மீரட்-ல் 6 பேரும், மனிப்பூரில் 4 பேரும், காஸ்கானி பகுதியில் 3 பேர், பாரேய்லி, பாகப்பட் மற்றும் புலந்தேஷ்ஹார் பகுதியில் 2 பேர் எனவும் கான்பூர், மதுரா, காய்ஜியாபாத், ஹாப்பூர், ரா பெரெய்லி, ஜாலுவான், ஜான்பூர், பிரத்பார்க், பாந்தா, பரிஜாபாத், அமெய்தி, கான்பூர் மற்றும் முஷாபர் நகர் ஆகிய பகுதிகளில் ஒருவர் என பலி எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், மீட்பு பணிகளை கவனிக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...