காஷ்மீரில் ரிசர்வ் படை வீரர் நசீர் அஹமது சுட்டுக் கொலை!

July 30, 2018

ஜம்மு (30 ஜூலை 2018): ஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை வீரர் நசீர் அஹமது சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

விடுப்புக்கு வீட்டிற்கு வந்திருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் நசீர் அஹமது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷகீல் அஹமது என்ற காவலர் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் உயிருடன் வீடு திரும்பினார். இந்நிலையில் நசீர் அஹமது சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் சமீப காலமாக தொடர்ந்து முஸ்லிம் காவலர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Search!