புனேவில் திடீர் கலவரம் - வாகனங்களுக்கு தீ வைப்பு!

ஜூலை 30, 2018 530

புனே (30 ஜூலை 2018): மஹாரஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியதில் வாகனங்கள் பலவற்றிற்கு தீ வைக்கப் பட்டுள்ளது.

மராட்டிய அமைப்புகள் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புனேவில் இன்று நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் 40 க்கும் அதிகமான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டுள்ளன.

இதற்கிடையே அவுரங்காபாத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ரெயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...