ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பீதியை கிளப்பியுள்ள புதிய இளைஞர் அமைப்பு!

ஜூலை 31, 2018 1493

தியோபந்த் (31 ஜுலை 2018) முஸ்லிம்கள் இந்துத்வா அமைப்பினரால் குறி வைத்து தாக்கப்படும் நிலையில்ன் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள 'ஜமாத்-எ- இளைஞர் அமைப்பு’ என்ற புதிய அமைப்பு தொடங்கப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் இந்துத்வா பயங்கரவாதிகளால் குறி வைத்து தாக்கப் படுகின்றனர். இதையடுத்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமாய்த் உலாமா-எ-ஹிந்த் சார்பில் ‘ஜமாத்-எ- இளைஞர் அமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த 10 மாத காலத்தில் இந்த அமைப்பில் 10,000 உறுப்பினர்களை சேர்க்க, ஜமாய்த் உலாமா-எ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மகமூத் மதானி திட்டமிட்டுள்ளார்.

இந்த அமைப்பின் உறுப்பினர் களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது. உத்திர பிரதேசத்தின் புகழ் பெற்ற தாரூல் உலூம் மதரஸா அமைந்துள்ள தியோபந்த் நகரில் இந்த அமைப்பின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுவதும் அதனை ஆளும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருக்க இந்த அமைப்பு தொடங்கப் பட்டுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அமைப்புக்கு கடும் எதிர்ப்பு இருந்த போதும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த அமைப்பு அவசியம் ஆகிறது என்று ஜமாய்த் உலாமா-எ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மகமூத் மதானி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...