மருத்துவ சிகிச்சைக்காக முதல்வர் அமெரிக்கா பயணம்!

ஜூலை 31, 2018 547

திருவணந்தபுரம் (31 ஜூலை 2018): கேரள முதல்வர் பிணராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

பினராயி விஜயனுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அவர் அமெரிக்காவில் ரோச்சஸ்டரில் உள்ள மேயோ கிளினிக்கில் சிகிச்சை பெறவுள்ளார். ஆனால் எதற்கான சிகிச்சை என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அவர் வரும் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 6 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் தங்கியிருந்து சிகிசை பெறுவார் என கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...