மேலும் உயரும் சமையல் சிலிண்டர் விலை!

ஆகஸ்ட் 01, 2018 574

புதுடெல்லி (01 ஆக 2018): மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஐ.ஓ.சி.எல் நிறுவனம் மேலும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1.76 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவை காரணமாக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமையல் எரிவாயுவின் விலை 1 ரூபாய் 76 காசு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல் ஆகியுள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1.76 உயர்த்தப்பட்டு ரூ.496.26 இல் இருந்து ரூ.498.02 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மானியமில்லா சிலிண்டரின் விலையும் ரூ.35.50 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...