புதுமண தம்பதிகளை சிறுநீர் குடிக்க வைத்த கொடுமை!

ஆகஸ்ட் 01, 2018 688

போபால் (01 ஆக 2018): மத்திய பிரதேசத்தில் புதுமண தம்பதிகளை குடும்பத்தினரே சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஹர்தாஸ்பூரில் ஒரு இளம் ஜோடியினருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் குடும்பத்தினருக்கு தெரியாமல் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த காதலர்களின் குடும்பத்தினர் புதுமணத்தம்பதியினரை கடத்திச் சென்றனர். பின்னர் மணமகளின் தலைமுடியை வெட்டி சித்தரவதை செய்ததோடு, இருவரையும் சிறுநீரை குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான இருவரை கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...