இம்ரான்கான் பதவியேற்பு விழாவிற்கு அமீர்கான் கவாஸ்கருக்கு அழைப்பு!

ஆகஸ்ட் 02, 2018 618

இஸ்லாமாபாத் (02 ஆக 2018): பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து நடிகர் அமீர்கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ் கவாஸ்கர், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானின் பொதுதேர்தல் கடந்த ஜூலை 25-ஆம் நாள் நடைப்பெற்றது. இத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் எனப்படும் பிடிஐ கட்சி 116 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகர் அமிர் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் பிரதமர் மோடிக்கு இதுவரை அழைப்பு விடுக்கப் படவில்லை. அதேவேளை வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிடிஐ கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...