முதல் மனைவி கணவருக்கு கொடுத்த கொடூர தண்டனை!

August 04, 2018

முசப்பர் நகர் (03 ஆக 2018): முதல் மனைவியை சரிவர கவனிக்காமல் இரண்டாவது மனைவிக்கு மட்டும் உதவி செய்து வந்த கணவரின் ஆணுறுப்பை வெட்டி முதல் மனைவி கொடூர தண்டனை வழங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டம் மிம்லானா பகுதியை சேர்ந்தவர் யூனஸ் அகமது. 45 வயதான இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் முதல் மனைவிக்கு பொருளாதார உதவி எதுவும் செய்யாமல் யூனுஸ் இரண்டாவது மனைவிக்கு மட்டும் உதவி செய்வதோடு அவருடனேயே வாழ்ந்து வந்துள்ளார். பலமுறை முதல் மனைவி பணத்துக்காக கணவரிடம் போராடி தோற்றதால் கோபமடைந்த அவர் கணவரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார்.

யூனுசின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யூனுசை மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக முதல் மனைவி கைது செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!