முதல்வரை கொலை செய்ய முயற்சி - ஒருவர் கைது!

ஆகஸ்ட் 04, 2018 610

புதுடெல்லி (04 ஆக 2018): கேரள முதல்வர் பிணராயி விஜயனை கொலை செய்ய முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். அவர் அங்குள்ள கேரளா ஹவுசில் தங்கியுள்ளார். இதையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் அங்கு வந்த ஒருவர் கத்தியை கையில் வைத்தவாறு பினராயி விஜயன் தன்னை வஞ்சித்து விட்டதாக கூச்சலிட்டு தான் தற்கொலை செய்து கொள்தாகவும் கூறினார்.

அவர் தனது சட்டையில் தேசியக்கொடியை குத்தியிருந்தார். இந்நிலையில் பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் விமல் ராஜ் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் 2 முறை பினராயி விஜயனை சந்தித்துள்ளதாகவும், அவரது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்த முதல்வர், இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பினராயி விஜயனை கத்தியால் குத்த வந்ததாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...