பரூக் அப்துல்லா வீட்டில் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை!

ஆகஸ்ட் 04, 2018 545

ஜம்மு (04 ஆக 2018): காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில் நுழைய முயன்றவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா வீடு ஜம்முவில் வசித்து வருகிறார். இன்று காலை காரில் ஒன்று அவரது வீட்டின் மீது மோதியது. அப்போது அந்த காரை ஓடிக்கொண்டிருந்தவன் தொடர்ந்து முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் மர்ம நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த நபர் எந்த நோக்கத்தில் வந்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...