மாட்டுக்காக மற்றும் ஒரு படுகொலை!

ஆகஸ்ட் 04, 2018 446

சண்டீகர் (04 ஆக 2018): அரியானாவில் மாட்டை திருடியதாக கூறி 25 வயது இளைஞர் அடித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

அரியானாவின் பஹரோலா அருகே உள்ள கிராமம் ஒன்றில் மாடு திருடியதாகக் கூறி ஒரு இளைஞரை அடித்து படுகொலை செய்துள்ளது. கொல்லப் பட்ட நபர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

அரியானாவின் ஆல்வாரில் பெஹ்லுகான் தொடங்கி கடந்த வாரம் மாடுகளை வாங்கிச் சென்ற ரக்பர் கான் என்ற 28 வயது இளைஞர் வரை பலர் அடித்துப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் நாடெங்கும் மாட்டுக்காக தொடர்ந்து பலர் படுகொலை செய்யப் படுவது தொரந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...