அருண் ஜெட்லி மீண்டும் இந்த மாதம் பொறுப்பேற்கிறார்!

ஆகஸ்ட் 04, 2018 424

புதுடெல்லி (04 ஆக 2018): சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வு பெற்று வந்த மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, மீண்டும் வரும் 20 ஆம் தேதி நிதியமைசர் பெறுப்பேற்கிறார்.

அருண் ஜெட்லி கடந்த சில மாதத்துக்கு முன்பாக, சிறுநீரக பிரச்னையால் அவதிக்கு ஆளாகி வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனால், தொடர்ந்து அவர் மூன்று மாதம் ஓய்வில் இருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.

ஆனால், அதற்கு முன்பு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வீடியோ கான்பரன்ஸிங் முறையில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில், தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், நோய் தொற்றுக் காலம் முடிவுற்ற நிலையிலும், வருகிற 20ம் தேதிக்கு மேல் தனது பணியை தொடரலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், அவரின் அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு, நோய் தொற்று வராமல் இருப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளையும் அமைச்சக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...