பாஜகவில் இணைகிறாரா கிரிக்கெட் வீரர் தோனி?

ஆகஸ்ட் 05, 2018 602

புதுடெல்லி (05 ஆக 2018): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்துப் பேசியுள்ளார்.

வருகின்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ (சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்) என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. அதன்படி பாஜக தலைவர் அமித்ஷா, பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ஞாயிறன்று சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள தோனியின் இல்லத்தில் மாலை 6.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் இருந்தார்.

சமீபத்தில் லதா மங்கேஷ்கர், கபில் தேவ், மாதுரி திக்ஸிட், தல்பீர் சிங் சுஹாக் உள்ளிட்ட பிரபலங்களை அமித்ஷா சந்தித்த நிலையில் தோனியையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...