நேபாளில் 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு!

ஆகஸ்ட் 06, 2018 632

காத்மண்டு (06 ஆக 2018): மானசரோவரில் மோசமான வானிலை நிலவுவதால் 200 இந்தியர்கள் நேபாளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

கைலாஷ் மானசரோவருக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். 200 இந்தியர்கள் மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டனர். இதில் 23 தமிழர்களும் உண்டு.

அங்கு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக 200 இந்தியர்கள் நேபாளத்தில் உள்ள அம்லா மாவட்டத்தில் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வானிலை மோசமாக உள்ளதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே வானிலை சரியான பிறகு அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அது வரை அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த மாதமும் இதேபோல் மோசமான வானிலை காரணமாக 1500 யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கி தவித்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...