குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு கடுங்காவல்!

ஆகஸ்ட் 06, 2018 594

நியூயார்க் (06 ஆக 2018): அமெரிக்காவில் லேப்டாப்பில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறைத் தன்டனை விதிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் பிட்ஸ்பெர்க்கில் உள்ள அபிஜித் தாஸ் என்ற 28 வயது இந்திய இளைஞர், சட்டத்திற்கு புறம்பாக அவருடைய கணினியில் பாலியல் இச்சை அளிக்கும் வகையிலான குழந்தைகளின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

அவர் மீது இது தொடரப்பட்ட வழக்கின் விசாரனை முடிவில், தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஸ்காட் பிராடி, அபிஜித் தாஸ்ஸிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...