CPI(M) தொண்டர் படுகொலை - பின்னணியில் பாஜக?

August 06, 2018

காசர்கோடு (06 ஆக 2018): கேரள மாநில CPI(M) உறுப்பினர் கொலை செய்யப் பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது.

கேரளாவின் கசரகோடு பகுதியில் CPI(M) உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலின் பல பாகங்களில் கத்தி குத்துகளுட்ன மீட்கப்பட்ட அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல பட்டதாகவும், ஆனால் அவர் வழியிலேயே இறந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் CPI(M) மற்றும் பாஜக-விற்கு இடையில் தொடர்ந்து பிரச்சணைகள் நடைப்பெற்று வருவதும், இதனால் இரு கட்சி உறுப்பினர்களும் மர்மமான முறையில் இறப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

சமீபத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர் அடித்து கொல்லபட்டதை அடுத்து அவரது மரணத்திற்கு காரணம் CPI(M) உறுப்பினர்கள் தான் என பாஜக தலைவர் அமித்ஷா உள்பட அக்கட்சியினர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!