நான் டாக்டரிடமே சென்றதில்லை - 96 வயது மூதாட்டி சொல்லும் ரகசியம் இதுதான்!

ஆகஸ்ட் 06, 2018 646

திருவனந்தபுரம் (06 ஆக 2018): 96 வயதாகியும் இதுவரை டாக்டரிடமே செல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மூதாட்டி அவரது ஆரோக்கியத்திற்கான ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் ஏராளமான முதியவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கேரளா முழுவதும் 40 ஆயிரம் முதியோர்கள் தேர்வு எழுதினர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப்பள்ளியில் கார்த்தியாயினி என்ற 96 வயது மூதாட்டியும் தேர்வு எழுதினார்.

புத்தகங்கள் படிக்கும் தேர்வில் மூதாட்டி கார்த்தியாயினி 30க்கு30 மதிப்பெண் பெற்றார். இதுகுறித்து அந்த மூதாட்டி தெரிவிக்கையில், இதுவரை உடம்பு சரியில்லை என மருத்துவமனைக்கு சென்றதில்லை. பார்வை குறைபாடு காரணமாக மட்டும் ஆபரே‌ஷன் செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். இதற்கு முக்கிய காரணம் நான் தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்வது தான் என மூதாட்டி கார்த்தியாயினி உத்வேகத்துடன் கூறினார்.

பொதுவாக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துறைப்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...