காங்கிரஸ் மூத்த தலைவர் மரணம்!

ஆகஸ்ட் 07, 2018 506

புதுடெல்லி (07 ஆக 2018): காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளருமான ஆர்.கே தவான் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

ஆர்.கே.தவான் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் தனிச் செயலராக பணிபுரிந்தவர். உடல் நலிவுற்றதால் கடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான தவானுக்கு 81 வயதாகிறது. உடல் நலிவுற்றதால் கடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அவரது நம்பிக்கைக்கு உரியவராக தவான் திகழ்ந்தார் . நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியதில் தவானுக்கு முக்கியப்பங்கு உண்டு என்று கூறப்படும் அளவுக்கு அவர் மிக முக்கியமானவராக காங்கிரஸ் கட்சியில் விளங்கினார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று அவர் காலமானார். அவரது மரணத்திற்கு காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...