சுவாமி விவேகானந்தரையும் குண்டர்கள் தாக்கியிருப்பார்கள் - சசிதரூர்!

ஆகஸ்ட் 07, 2018 350

திருவனந்தபுரம் (07 ஆக 2018): சுவாமி விவேகானந்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார்’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் என்பவர் அண்மையில் தாக்கப்பட்டார். இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சசி தரூர், சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பேசியதாவது:

சுவாமி விவேகானந்தர் மட்டும் இன்று இருந்திருந்தால், அக்னிவேஷைப் போன்று அவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார். விவேகானந்தரின் முகத்திலும் இன்ஜின் ஆயில் ஊற்றியதுடன், அவரை தெருவில் கீழே தள்ளி தாக்கியிருப்பார்கள். ஏனென்றால், விவேகானந்தர் மக்களை மதிக்க வேண்டும் என கூறியவர். மனிதநேயம்தான் மிக முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 2,920 மதக் கலவரங்கள் நடைபெற்றன. பசுவதை தொடர்பான தாக்குதல் காரணமாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 68 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றார் சசிதரூர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...