ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு ரிசர்வ் வங்கியில் உயரிய பதவி!

ஆகஸ்ட் 09, 2018 503

புதுடெல்லி (09 ஆக 2018): ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்திக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் உயரிய பதவி வழங்கப் பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு குருமூர்த்தியை, ஆர்பிஐ-யின் பகுதி நேர (அதிகாரபூர்வமற்ற) இயக்குநராக நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளது. அவரது பதவிக் காலம் 4 ஆண்டுகள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குருமூர்த்தியுடன் சேர்த்து தொழிலதிபர் சதீஷ் காசிநாத் மராத்தேவையும் ஆர்பிஐ பகுதி நேர இயக்குநராக 4 ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது.

பண மதிப்பிழப்பை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்த குருமூர்த்தி, தமிழில் வெளிவரும் பத்திரிகையான ‘துக்ளக்’-ன் ஆசிரியராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...