ஜாமீனில் வெளி வரும் வகையில் முத்தலாக் சட்ட திருத்தம்!

ஆகஸ்ட் 09, 2018

புதுடெல்லி (09 ஆக 2018): முத்தலாக் சட்ட திருத்த புதிய மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஜாமீனில் வெளியே வரலாம்.

முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவைக்கு அனுப்பப்ட்ட இந்த மசோதவில் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளில் ஈடுபட்டதால கடந்த கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படவில்லை

இந்நிலையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் ஜாமீனில் வெளிவரமுடியாத நிலை இருந்தது.

ஆனால், தற்போது , ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!