முஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு!

ஆகஸ்ட் 10, 2018

புதுடெல்லி (10 ஆக 2018): முஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு டெல்லி கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த இம்தியாசுர் ரஹ்மான் என்பவர் இந்து பெண்ணான நிவேதிதா கத்தாக் என்பவரை இருபது வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். ஆனால் நிவேதிதா இந்துவாகவே வாழ்ந்து வந்தார். கோவிலுக்கும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் திடீரென நிவேதிதா இறந்தார். அவரை இந்து முறைப்படி சடங்குகள் செய்ய அவரது கணவர் இம்தியாஸ் நினைத்தார். ஆனால் நிவேதிதா முஸ்லிமை மணந்ததால் அவர் இந்து முறைப்படி சடங்குகள் செய்ய முடியாது என்று டெல்லி காலி மந்திர் கோவில் நிர்வாகம் மறுத்து விட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!