கேரளாவில் வெள்ள பாதிப்பால் 54000 பேர் வீடுகள் இழப்பு!

ஆகஸ்ட் 11, 2018 525

திருவனந்தபுரம் (11 ஆக 2018): கேரளாவின் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 54000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

இடுக்கி அணையை பொறுத்தவரை கடந்த 1992-ஆம் ஆண்டு அணைகள் நிரம்பி மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 26 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அணையை திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை நிரம்பியதை அடுத்து பாதுகாப்பு நலன் கருதி அணையின் மதகுகளை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நெற்றி அணையின் 5 மதகுகள் திறக்கப்பட்டதால் கூடுதல் தண்ணீர் வெளியேறுகின்றனர். இதனால் செறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள கிராமங்களுக்கு வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதில் 25 பேர் நிலச்சரிவில் சிக்கியும், 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். கேரளாவை பொருத்த வரை இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...