ரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்க பாபா ராம்தேவ் எதிர்ப்பு!

ஆகஸ்ட் 11, 2018 576

புதுடெல்லி (11 ஆக 2018): ரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்குவதற்கு பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு இடம் பெயரும் அகதிகளை குறித்து கருத்து தெரிவித்துள்ள பதஞ்சலி நிறுவன தலைவர் பாபா ராம்தேவ். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்று முதல் நான்கு கோடி பேர் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கி உள்ளனர். தற்போது ரோஹிங்கியாவை சேர்ந்தவர்களும் நமது நாட்டில் வந்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது. இந்த ரோஹிங்கியாவை சேர்ந்தவர்க நமது நாட்டில் தங்கி விட்டால், தற்போது உள்ள காஷ்மீர் மாநிலத்தை போல இன்னும் 10 காஷ்மீர் மாநிலம் உருவாகி விடும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...