பாகிஸ்தான் செல்லும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்!

ஆகஸ்ட் 11, 2018 570

புதுடெல்லி (11 ஆக 2018): இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து மூன்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்வார்கள் என தெரிகிறது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் ஆகஸ்ட் 18-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். முன்னதாக ஆகஸ்ட் 11-ம் தேதி பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களும், இம்ரான் கானின் பழைய நண்பர்களுமான கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் அழைக்கப்பட இருப்பதாக, பி.டி.ஐ கட்சி தெரிவித்துள்ளது.

அழைப்பு வருவதற்கு முன்பாகவே,இது குறித்து தகவல் தெரிவித்த நவ்ஜோத் சிங் சித்து, தான் நிச்சயம் பதவியேற்பு விழாவுக்கு செல்ல இருப்பதாகவும், இம்ரான் நம்பத் தகுந்த மனிதர் என்றும் கூறியுள்ளார்.

கபில்தேவ் இந்திய அரசிடம் அனுமதி பெற்று செல்வதாக தெரிவித்துள்ளார். காவாஸ்கர் இதுகுறித்து இதுவரை உறுதியான பதில் அளிக்கவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...