பல இடங்களில் குண்டு வைக்க திட்டம் தீட்டிய இந்துத்வ தீவிரவாதிகள் கைது!

ஆகஸ்ட் 12, 2018 648

மும்பை (12 ஆக 2018): சுதந்திர தினம் நெருங்கி வரும் வேளையில் மகாராஷ்டிராவில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்க திட்டம் தீட்டிய இந்துத்வ தீவிரவாதிகள் மூன்று பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வைபவ் ரெளட், ஷரத் கலாஸ்கர், சுதன்வா கோண்டலேகர் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு, மூன்று பேரை கைது செய்துள்ளது.

கைதான காலாஸ்கரின் வீட்டில் இருந்துவெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய ஆவணங்கள்கைப்பற்றப்பட்டுள்ளதாக தீவிரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மும்பையில் உள்ள வைபவ் ரெளட்டின் வீட்டில் இருந்து 22 வெடிகுண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டவர்கள் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவருக்கும் சன்ஸ்தான் சந்தா என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது

கைது செய்யப்பட்டுள்ள வைபவ் ரெளட், ஷரத் கலாஸ்கர், சுதன்வா கோண்டலேகர் ஆகிய மூவரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினம் மற்றும் பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்துத்வ தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப் பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...