BREAKING NEWS: வாஜ்பாய் உடல் நிலையில் பின்னடைவு!

August 12, 2018

புதுடெல்லி (12 ஆக 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை கடந்த ஜூன் மாதம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால், அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வாஜ்பாயி வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரிக்க அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!