டெல்லி ஜாமியா ஹம்தார்த் பல்கலைக் கழகத்திற்கு சவூதி அரேபியா நிதியுதவி!

ஆகஸ்ட் 12, 2018 621

புதுடெல்லி (12 ஆக 2018): டெல்லி ஜாமியா ஹம்தார்த் பல்கலைக் கழகத்திற்கு சவூதி அரேபியா 5 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது.

சவூதி - இந்திய உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதியுதவியில் புதிய மருத்துவக் கல்லூரி, மற்றும் மஜீதியா மருத்துவ மனை விரிவாக்கம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும். புதிய கட்டிடங்களுக்கு மறைந்த சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பெயர் வைக்கப்படும்.

அல் இமாம் முஹம்மது பின் சவூத் இஸ்லாமிய பல்கலைக் கழகம் மற்றும் ஜாமியா ஹம்தார்த் பல்கலைக் கழகம் இடையே ஏற்படுத்தப் பட்ட உடன்பாட்டின்படி, இரு பல்கலைக் கழக மாணவர்கள் பல கல்வி மேம்பாடுகளில் பயன்படுத்தப் படுவார்கள். இதில் செமினார், பேராசிரியர்கள், ஆராய்ச்சிகள் அனைத்தும் இவ்விரு பல்கலைக் கழகங்களிடையே பரஸ்பரம் உதவிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...