மாற்றுத் திறனாளி பெண் உட்பட நான்கு பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவரால் தொடர் வன்புணர்வு!

August 12, 2018

போபால் (12 ஆக 2018): மத்திய பிரதேசத்தில் மாற்றுத் திறனாளி பெண் உடபட நான்கு பெண்கள் ஆர்.எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவரால் தொடர் வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேச்சு, செவித்திறன் குறைபாடு உடைய இருபது வயது இளம்பெண் போபாலில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் இயக்குநர் அஷ்வனி குமார் ஆறு மாதங்களாக வன்புணர்வு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அஸ்வனி குமார் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

இதற்கு இரு தினங்கள் கழித்து, மேலும் இரண்டு பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்திருந்தனர். தற்போது நான்காவதாக மேலும் ஒரு பெண் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் "ஆறு மாதங்களாக என்னை அடைத்து வைத்து பல்வேறு சித்ரவதைகள் செய்தார். ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, தொடர்ந்து வன்புணர்ந்தார். மறுத்தால் மோசமாகத் தாக்குவார்" என்று அதிர்ச்சி தரும் புகார்களை இந்தூர் காவல்துறையிடம் அடுக்கியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்றே கைது செய்யப்பட்ட விடுதி இயக்குநர் அஷ்வனி குமார் மீது வன்புணர்வு, மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வத்தல், தலித்துக்கு எதிரான வன்கொடுமை ஆகிய பிரிவுகள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதனிடையே காங்கிரஸ் கட்சி, "அண்மையில் பீகாரில் குழந்தைகளை வன்புணர்ந்து சித்திரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜேஷ் தாகூர் என்னும் நபரைப் போலவே அஷ்வினி குமாரும் பாஜகவுடன் தொடர்புடையவர்" என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷோபா ஆஸ், "கைது செய்யப்பட்ட அஷ்வினி குமார் ஒரு ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் ஆசி பெற்றவர்" என்று கூறினார். காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவில், அஷ்வினி குமார் முதல்வர் சிவராஷ் சிங் சவுகானோடு நெருக்கமாக நின்றிருப்பதாகவும் அவரின் பாதத்தைத் தொட்டு ஆசி பெறுவதாகவும் காட்சிகள் உள்ளன.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!