வெள்ளத்தால் பாஸ் போர்ட் இழந்தவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் - சுஷ்மா ஸ்வராஜ்!

ஆகஸ்ட் 12, 2018 420

புதுடெல்லி (12 ஆக 2018): கேரளா பெரும் வெள்ளத்தில் பாஸ் போர்ட்டை இழந்த மக்களுக்கு இலவசமாக புதிய பாஸ் போர்ட் வழங்கப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன. வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், அரசியல் கட்சிகள் பலவும் நிவாரண நிதி அளித்து வருகின்றன.

இந்நிலையில் வெள்ளத்தால் பாஸ் போர்ட்டை இழந்த மக்களுக்கு இலவசமாக புதிய பாஸ் போர்ட் வழங்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலங்களை அனுகி பெற்றுக்கொள்ளலாம் என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...