நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்!

ஆகஸ்ட் 13, 2018 537

கொல்கத்தா (13 ஆக 2018): நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்.

நாடாளுமன்ற சபாநாயகராக 2004–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89). சோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கப்பட்டு இருந்தார். மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சோம்நாத் சட்டர்ஜி காலமானார்

சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாக 10 முறை இருந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...