இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி!

ஆகஸ்ட் 13, 2018 633

புதுடெல்லி (13ஆக 2018): அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 69.62 ஆக இருக்கிறது. நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.53 ஆக ஆனது. ஆனால், சந்தை நேர முடிவில் அது சற்று அதிகரித்து 68.84 ஆக நிலைகொண்டது. ஆனால், இன்று காலை மீண்டும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதாலும், அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாலும், வளர்ந்து வரும் சந்தைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரிலும், ஜப்பானிய யென்னிலும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...