டெல்லியில் பரபரப்பு - உமர் காலித் மீது துப்பாக்கிச் சூடு!

August 13, 2018

புதுடெல்லி (13 ஆக 2018): டெல்லி ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித்தை டெல்லியில் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நாடாளுமன்றம் அருகே இச்சம்பவம் நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. உமர் காலித் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் தப்பி ஓடும்போது அவரின் துப்பாக்கி கைதவறி விழுந்தது. அதனை கைப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக ஜே.என்.யு மாணவர் தேர்தலில் பல்வேறு கலவரங்கள் நடைபெற்றன. இந்நிலையில் மாணவர் சங்க தேர்தலில் உமர் காலித் வெற்றி பெற்றதை ஏற்று கொள்ளாதவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!