அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி 72 மணி நேரம் கெடு!

ஆகஸ்ட் 13, 2018 731

கொல்கத்தா (13 ஆக 2018): தன் மீது அவதூறு குற்றச்சாட்டு பதிவு செய்த அமித் ஷா 72 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பாணர்ஜி நோட்டீஸ் அனுபியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பாணர்ஜி மீது ஊழல் குற்றச் சாட்டை வைத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அபிஷேக் பாணர்ஜி, ஆதாரமற்ற இந்த குற்றச் சாட்டுக்கு அமித் ஷா பதிலளித்தே ஆக வேண்டும் என்றும் மேலும் 72 மணி நேரத்த்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...