என்னது இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு சரிவா?

August 14, 2018

புதுடெல்லி (14 ஆக 2018): அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.08 ஆக உள்ளது. துருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.62 ஆக இருந்தது. மேலும் வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!