நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு!

August 14, 2018

புதுடெல்லி (14 ஆக 2018): நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா, சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியும் முழு ஆதரவை அளித்து வந்தார்.

இந்நிலையில், “ஒரே தேசம் ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த, அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமானது. மேலும், கூடுதல் காவல் படையினர், தேர்தல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், இந்த முறையை செயல்படுத்தும் திட்டம் இல்லை” என்று தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார்

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!