ஜி.எஸ்.டி.யால் நாட்டு மக்களுக்கு இழப்பில்லை - பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை!

ஆகஸ்ட் 15, 2018 518

புதுடெல்லி (15 ஆக 2018): நாட்டின் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார்.

காலை 7.15 மணிக்கு செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 7.30 மணியளவில் மூவர்ண தேசியை கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.

அவர் பேசும்போது, "நம் நாட்டின் 72வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் உலகின் 6வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவை எண்ணி பெருமை கொள்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளில், கனமான பருவ மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பில் குடும்பங்களை இழந்த மக்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினர், பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோரின் சேவைக்கு மரியாதை செலுத்துகிறேன். அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு, என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர், அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் இந்திய நாட்டில், அனைவருக்கும் சம உரிமை கிடைக்க நாம் வழிவகுக்க வேண்டும்.

2019ல், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த துயர சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.

முதலில், ஜிஎஸ்டி சில பிரச்சனைகளை சந்தித்தாலும், பின்னர் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய விஞ்ஞானிகள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். 100 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்தனர். புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்."

இவ்வாறு மோடி பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...