முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடம்!

August 16, 2018

புதுடெல்லி (16 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவருகிறார். இந்தநிலையில், அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். முன்னதாக கடந்த 12ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் வாஜ்பாயை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்தநிலையில் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!