உமர் காலீத் மீதான தாக்குதலைத் தொடர்ந்து டாக்டர் கஃபீல் கானுக்கு கொலை மிரட்டல்!

August 16, 2018

புதுடெல்லி (16 ஆக 2018): உத்திர பிரதேசத்தில் குழந்தைகளை காப்பாற்ற உதவிய டாக்டர் கஃபீல் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் உமர் காலீத் நாடாளுமன்றம் அருகே மர்ம நபர் ஒருவரல் சுடப் பட்டார். எனினும் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் உத்திர பிரதேசம் கோராக்பூர் மருத்துவமனையில் அரசின் மெத்தன போக்கால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆக்சிஜன் ஏற்பாடு செய்த டாக்டர் கஃபீல்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

நாட்டில் நடைபெறும் அநீதிக்கு எதிரான மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட நிலையில் அவருக்கு இந்த கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. டாக்டர் கஃபீல்கான் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்திய உபி அரசு அவரை கோராக்பூர் மருத்துவமனையிலிருந்து நீக்கம் செய்ததோடு அவரை சிறையிலும் அடைத்தது. தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

அவருக்கு வந்த எஸ்.எம்.எஸ் தகவலில்,"இது உனது நேரம். இப்போது நீ தப்பிக்க முடியாது" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஜே.என்.யூ மாணவர் தலைவர் உமர் காலீத் அநீதிக்கு எதிரான மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!