சுதந்திர தினத்தில் அமித்ஷா தேசிய கொடிக்கு செய்த அவமரியாதை - வீடியோ!

ஆகஸ்ட் 16, 2018 498

புதுடெல்லி (16 ஆக 2018): சுதந்திர தினத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேசிய கொடியை ஏற்றுவதற்கு பதில் தவறுதலாக இறக்கியதோடு கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையும் அவர் செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பாஜக தலைமையகத்தில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தேசிய கொடி ஏற்றினார். ஆனால் அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு பதில் இறக்கிவிட்டார். பின்பு சுதாரித்துக் கொண்டு மீண்டும் தேசிய கொடியை ஏற்றினார்.

மேலும் தேசிய கொடியைப் பார்த்து சல்யூட் செய்வதும் அதற்கு கொடுக்கும் மரியாதையாகும். ஆனால் அதனை செய்யாமல் பொது மக்களை பார்த்து சல்யூட் செய்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் அமித் ஷாவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...