கேரள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

ஆகஸ்ட் 16, 2018 396

கோழிக்கோடு (16 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுளள்ன. இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். 21 குழுக்களாக கப்பற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுளளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும் பலி எண்ணிக்கை உயரும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...