BREAKING NEWS : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

ஆகஸ்ட் 16, 2018 630

புதுடெல்லி (16 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி அவரது 94 வது வயதில் காலமானார்.

வாஜ்பாய் கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...